நாட்டில் நியாயமற்ற உத்தரவாத காப்புறுதி பாலிஸிகள் அமலாக்கம் குறித்து மலேசியர்கள் உணர தொடங்கி விட்டதாக தேசிய பயனீட்டாளர் புகார் மையத்தின் உயர்நிலை நிர்வாகி சாரால் ஜேம்ஸ் மணியம் கூறினார்.


இந்த காப்பறுதி பாலிஸிகளில் உரிமை கோரிக்கைகள் மறுக்கப்படுவதோடு ‘திரும்ப கிடைக்காத’ கொள்கைகள் பயனீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை தந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். இந்த காப்புறுதி பாலிஸிகளில் உத்தரவாத பாதுகாப்பு பலவீனமாக இருப்பதோடு மோசமான அமலாக்கத்தில் உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.


உலகளவில் பயனீட்டாளர்கள் எழுத்துப்பூர்வமான பாதுகாப்பு உத்திரவாத அட்டைகளில் மட்டுமின்றி, வலுவான சட்டங்களை முன்வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.


ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு பொருள் விற்பனையும் பயனீட்டாளர்களுக்கு முழுமையான உத்தரவாதம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். பிரிட்டனில் ஒரு தவறான பொருள் 30 நாட்களுக்குள் திருப்பி செலுத்தப்படும் சலுகை இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.


அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இந்த விவகாரங்களில் பயனீட்டாளர்களுக்கு போதுமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் மலேசியா இந்த விவகாரத்தில் பின் தள்ளப்பட்ட நிலையில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.


பெரிய வியாபாரத்தின் தயவில் பயனீட்டார்கள் இல்லை என்ற ஒரு நிலை ஏற்பட்டு விட்டது. ஆகையால் பயனீட்டாளர்களின் தேவை என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் உயர் அவர் சுட்டிக் காட்டினார்.


மலேசியர்கள் புத்திசாலிகள். நாட்டின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப அவர்கள் தங்களை தயார் படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.