㽶Ƶ

Print
Category: FOMCA di Pentas Media 2025

கூடுதல் வெ 5 கட்டணம் மீதான கேடிஎம் நிறுவனத்தின் ஒப்புதல், பயணிகளுக்கு மறைமுக கட்டணத்தை விதிக்கிறது என்பது நிரூபிப்பதாக மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் (போம்கா) சாடியது.


நெகிழ்வு கட்டண முறை என்ற போர்வையில் வெ 5 கூடுதல் கட்டணத்தை ரயில் பயணிகளுக்கு கேடிஎம் விதித்துள்ளது வேடிக்கையாக இருப்பதாக போம்கா தலைவர் டத்தோ டாக்டர் மாரிமுத்து நடேசன் கூறினார். இந்த கூடுதல் கட்டண அமலாக்கத்திற்கு கேடிஎம் பொது அறிவிப்பு எதையும் செய்யவில்லை என்றார் அவர்.


தனது நெகிழ்வு கட்டண முறையில் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் இந்த வெ 5 கூடுதல் கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளதாக கேடிஎம் விளக்கம் தந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.


இந்த விவகாரத்தில் அரசாங்க சார்பு நிறுவனமான கேடிஎம் குறிப்பாக ஊனமுற்றவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சற்றும் இறக்கம் காட்ட வில்லை என அவர் சாடினார். இந்த விவகாரம் குறித்து இணையவாசிகளின் கருத்துக்களை கேடிஎம் படித்து புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.


ஊனமுற்றவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மீது இந்த நிறுவனம் சற்றும் அக்கறை கொள்ளவில்லை என்பதே பொதுமக்களின் கருத்து என அவர் குறிப்பிட்டார்.


மலிவு மற்றும் நியாயமான கட்டணங்களை வழங்க கடந்த 2020 ஆம் ஆண்டில் நெகிழ்வு கட்டண முறையை கேடிஎம் அமலாக்கம் செய்துள்ளது.
இருப்பினும் இந்த விவகாரத்தில் வரி செலுத்துபவர்களுக்கு விளக்கம் தர கேடிஎம் கடமைப்பட்டுள்ளதாக டத்தோ மாரிமுத்து கூறினார்.