㽶Ƶ

Print
Category: FOMCA di Pentas Media 2025

பெட்டாலிங் ஜெயா மார்ச் 5: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புற அலுவல் நிறுவனங்கள் வெளியிட்டு வரும் விளம்பரங்களால் உலக அளவில் ஆயிரக்கணக்கான முறை சாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தேசிய பயனீட்டாளர் புகார் மையம் (என்சிசிசி) கூறியது. குறிப்பாக மலேசியாவில் இந்த ஏஐ புற அலுவல் நிறுவனங்களுக்கு எதிராக புகார்கள் அதிகரித்து வருவதாக என்சிசிசி மூத்த நிர்வாகி சாரால் ஜேம்ஸ் மணியம் கூறினார்.


இந்த வேலை வாய்ப்பின் வழி வாரத்திற்கு வெ 7,500 சம்பளம் வழங்கப்படும் என இந்த புற அலுவல் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.ஆனால் இந்த தகவல் உண்மை அல்ல என இறுதியில் தெரிய வருவதாக அவர் சொன்னார்.ஏஐ மேம்பாட்டுக்கு பங்களிப்பவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வெ 80 முதல் வெ 180 வரை சம்பளமாக வழங்கப்படும் என மலேசியாவில் ஏஐ புற அலுவலக நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்து வருகிறது. பயிற்சி தொகுதிகள், பரீட்சைகள் மற்றும் இதர பணிகள் முடித்த பின் இந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என பலர் புகார் செய்துள்ளனர் என அவர் சுட்டிக் காட்டினார்.


மேலும் அந்த நிறுவனம் இவர்களின் கணக்குகளை ரத்து செய்துள்ளது அல்லது புறக்கணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது குறித்து 3,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதிருப்தி மற்றும் சம்பளம் வழங்கப்படாத வேலை குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார். மலேசியாவில் கூடுதல் வருமானத்தை பெற முயற்சிக்கும் பல இது போன்ற நிறுவனங்களிடம் ஏமாந்து போகின்றனர்.


Open AI மற்றும் Scale AI போன்ற புகழ்பெற்ற பெயர்களைக் கொண்ட நிறுவனங்கள் அதிகமான சம்பளத்தை வழங்குவதாக கேள்வியுற்று மாணவர்கள், புதிய பட்டதாரிகள் மற்றும் நிபுணர்கள் நம்பி ஏமாந்து போவதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும் இந்த வேலை வாய்ப்புக்களுக்கான பின்னணி கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்த நிறுவனங்களிடம் வெளிப்படைத்தன்மை இல்லை.


இது போன்று நிறுவனங்கள் அலுவலகங்கள் இன்றி செயல்பட்டு வருகிறது. இணையம் மற்றும் சமூகவலைத்தளங்கள் வழி இயங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார். இலக்கவியல் வகையிலான இதுபோன்று மோசடி குறித்து மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த மோசடிக்கு ஆளாகாமல் இருக்க

மலேசிய தொழிலாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச பணிக்கு வாரத்திற்கு வெ 7,000 முதல் வெ 8,000 என்பது சாத்தியமான ஒன்றா? என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என சாரால் ஜேம்ஸ் ஆலோசனை கூறினார்.